This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Monday, 2 December 2013

பெரியாரின் தொண்டு

பெரியாரின் தொண்டு எட்டயபுரத்தில் நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் ஆச்சாரியார்,எம்.எஸ்.சுப்புலட்சுமி,சதாசிவம் அய்யர். ஆகியோர் அமர்ந்துகொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந்தூராரையும் டாக்டர் சுப்புராயனையும் தரையில் பாய் போட்டு உட்காரவைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அந்த நிலை தற்போது இல்லையே இந்த மாற்றத்திற்கு தந்தை பெரியார் தான் காரணம் என்று தற்போது திராவிட இயக்கத்தை திட்டும் சூத்திர தலைவர்களூக்கு தெரியுமா!?

Sunday, 1 December 2013

திருமால் அவதாரங்களை ஏன் பாரதத்தில் மட்டும் எடுக்கவேண்டும்? மற்ற நாடுகளில் ஏன் எடுக்கவில்லை?

அவதார்!

கேள்வி: 
திருமால் அவதாரங்களை ஏன் பாரதத்தில் மட்டும் எடுக்கவேண்டும்? மற்ற நாடுகளில் ஏன் எடுக்கவில்லை?

பதில்:
ஜீசஸ் ஏன் இந்தியாவில் பிறக்கவில்லை? முகம்மது நபிகள் ஏன் பாரதத்தில் பிறக்கவில்லை? இதற்கெல்லாம் பதில் தெரிகிறபொழுது, உங்கள் கேள்விக்கும் பதில் தெரிந்துவிடும். (- துக்ளக், 13.11.2013)

பொதுவாக ஆர்.எஸ். எஸ்.காரர்கள் சொல்லும் பதில்தான் இது! என்னதான் தன்னை மறைத்துக் கொண்டாலும் திருவாளர் சோ ராமசாமி இதுபோன்ற பதில்கள் மூலம் அவரை அறியாமலேயே, தான் ஒரு ஆர்.எஸ். எஸ்.காரர் என்பதை தனக்குத்தானே தனது முகமூடியைக் கிழித்துக்கொண்டு அம்பலப்படுத்திக் கொண்டு விடுவார். அதற்கு இந்தப் பதிலே போதுமானதுதான்.

இந்தப் பதிலில் சாரம் இருக்கிறதா, இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இந்த பதில் வேண்டுமானால் கிறித்தவர், முஸ்லிம்களை நோக்கிக் கூறப்பட்டதாக வைத்துக் கொள்வோம்.

இவர்களைத் தாண்டி இந்தக் கேள்வியைக் கேட்டால் திருவாளர் சோவிடம் அதற்கான அறிவு நாணயமான உரிய பதில் - சரக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட் டது.

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த சந்தேகம் வந்து கேள்வி கேட்பதாக வைத்துக்கொள்வோம்.

அவருக்கு சோவின் பதில் திருப்தி அளிக்க முடியுமா?

கடவுள், மதங்களில் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் இந்த வினாவைத் தொடுப்பதாக வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு சோ அளித்த பதில் ஏற்புடையதல்லவே!

உங்கள் மதத்தைப்பற்றிக் கேள்வி கேட்டால், அதற்கும் நேரடியாகப் பதில் சொல்ல முடிந்தால், அதற்கு பெயர் தான் ஏதோ சரக்குள்ளவர் என்பதற்கான அடையாளம்.

நீ குற்றவாளியா என்று கேட்டால், அவனும்தான் குற்றவாளி என்கிற பதில் மூலம் தன்னைக் குற்றவாளி என்று அப்பட்டமாக ஒப்புக் கொண்டதாகத்தானே பொருள்.

அவதார் என்றால் மேலே இருந்து கீழே இறங்குவது என்று பொருள். அந்த மேலே இருந்து, இந்துக் கடவுள் இந்தியாவில் மட்டும்தான் இறங்கவேண்டுமா? உங்கள் இந்து மதக் கடவுள் இந்தியாவுக்கு மட்டும்தானா? அதுவும் முஸ்லிம், கிறித்தவர், பகுத்தறிவுவாதிகளை நீக்கி மற்றவர்களுக்கு மட்டும்தான் கடவுளா?

கடவுள்கள் ஏரியாக்களைப் பிரித்து வைத்துக் கொண்டு விட்டார்களா?

இந்த உலகத்தைக் கட வுள் படைத்தார் என்பதெல்லாம் புரூடாதானே? ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என்பதெல்லாம் புலவர்களின் கைச்சரக்கு என்பதை மறைமுகமாகவாவது சோ ஒப்புக்கொண்டுவிட்டாரா இல்லையா?

- மயிலாடன்

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாம்!

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாம்!

கருநாடக மாநிலத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்!கருநாடகாவில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கேவலமான பிரார்த்தனை செய்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றதில் நிலுவையில் உள்ளது.

தட்சிண கருநாடக மாவட்டத்தில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 நாட்கள் மாதே ஸ்நானா பிரார்த்தனை நடை பெறும். பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலைமீது கீழ்தட்டு வகுப்பைச் சேர்ந்த பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு நேர்த்திக்கடன் செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்று நம்பப் படுகிறதாம்.

இந்தப் பிரார்த்தனை முறை கீழ்தட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று தட்சிண கருநாடக கல்லியா தாலுகாவைச் சேர்ந்த கருணாகர் என்னே மஜல், மங்களூரு தாலுகாவைச் சேர்ந்த ஜெயக்குமார் கிரேமத், கே.நாராயண செட்டி ஆகியோர் மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மனு கொடுத் தனர். எச்சில் இலை மீது கீழ்தட்டு மக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு

மதவழிபாட்டுத் தலங்களில் எல்லோரும் சமமே. இதில் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பாகுபாடு கூடாது. ஆனால் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு தெருவில் போட்ட எச்சிலை மீது பார்ப்பனர் அல்லாத பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்படுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். ஆகவே இதற்கு தடை விதிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தி யுள்ளனர்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநில முதலமைச்சரின் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பான எந்த உத்தரவும் தர வில்லை என்று கோவில் நிர்வாக அதிகாரி எம்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கேவலமான பிரார்த்தனையை மாற்றி அமைக்கக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஒருசில பக்தர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையில் மாற்றம் செய்வதற்கு தடை விதித்தது. (என்ன கேவலம்!) இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறையின் பாதுகாப்புடன் வழக்கம்போல் இந்தக் கேவலமான பிரார்த்தனை நடத்தப்பட்ட தாம். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.http://viduthalai.in/headline/70780-2013-11-20-10-46-39.html

காட்டு மிராண்டி பயல்களே

''காட்டு மிராண்டி பயல்களே!''ன்னு சொன்ன கோபம் வருது இவனுகளுக்கு.
இதுல கொஞ்சம் பேர் நாங்க இப்படியெல்லாம் இல்ல,எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனா மூடநம்பிக்கை இல்லை நாங்கெல்லாம்
டீசென்டா சாமி கும்பிடுவோம் ன்னு புதுவிளக்கம் சொல்லுவாங்க.
இப்படி சொல்றவனுககிட்ட நெருங்கி போய் பார்த்த இத விட கேவலமா ஏதாவது செஞ்சிட்டு இருப்பாங்க.
''கடவுள் நம்பிக்கையே,மூட நம்பிக்கைதான்''.

குடியரசு